Sunday, 24 February 2008

கிறிஸ்தவர்களையும் பாதிரியார்களையும் ஆட்டுவிப்பது யார் ?

இந்திய கிறிஸ்தவத்தையும் பாதிரியார்களையும் ஆட்டுவிப்பது யார் ?

கிறிஸ்தவர்கள் தாங்கள் சென்ற இடத்தில் எல்லாம் அங்கிருப்பவர்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், இனஅடையாளங்கள் முதலியனவற்றை அழித்து தங்களுடைய அடையாளங்களை (identity) புகுத்தியதாகவே பல்லாயிரமாண்டு வரலாறு கூறுகிறது. இது வரை கிறிஸ்தவர்கள் யாரையும் வாழ வைத்ததாக சரித்திரமே இல்லை. இப்படிப்பட்ட கொடூர குணமுடையவர்களின் சனிப்பார்வை இப்போது இந்தியாவின் மீது திரும்பியிருக்கிறது. இந்த கொள்கையை முதன்மையாக கொண்டு தற்போது பல்லாயிர கணக்கான மினிஸ்ட்ரிகள் தங்கள் கிளை அலுவலகங்களை இந்தியாவில் தொடங்கி இந்திய பாரம்பரியத்தை அழிக்கும் நாச வேலைகளை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து இந்த நாச திட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கார கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு வருடந்தோறும் வழங்கி வருகின்றன.

கிறிஸ்தவம் என்பது இந்தியாவைப் பொறுத்த வரையில் பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் ஒரு நம்பிக்கை தொழிற்சாலை. அதுமட்டுமல்ல இது நாசகார தொழிற்சாலையும் கூட. இவ்வளவு பணம் புரளும் போது பாவம் இந்திய ஏழைகளுக்கு ஒரு ஜீஸஸ் என்ன எழுபது ஜீஸஸ் உயிர்த்தெழுவார் என்பதில் ஆச்சர்யமொன்றுமில்லை. தற்போது கிறிஸ்தவர்கள் கூறிவருவது கிறிஸ்தவத்தை எதிர்த்து உலகில் குரல் எழும் என்று புனிதமென்றழைக்கப்படும் வேதகாமத்தில் கூறியிருக்கிறதாம். இது போன்ற கொள்கைகளை உலகத்தாரிடம் திணித்தால் உலம் சினம் கொள்ளும் என்பது வேதகாமத்தை எழுதுபவர்களுக்கு தெரிந்திருக்காதா என்ன ? இந்த உண்மையை கூடவா இந்திய கிறிஸ்தவர்களால் உணரமுடியவில்லை ??

இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2006 ஆம் ஆண்டு மட்டும் 5000 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவில் உள்ள பல் வேறு நிறுவனங்கள் நிதி பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 1610 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யபட்டுள்ளது.

இதில் பெரும்பான்மையாக பணம் கொடுத்திருப்பது கிறிஸ்தவ அமைப்புகள்களே.
Gospel Fellowship Trust India, USA என்ற நிறுவனமே 230 கோடி ரூபாய் கொடுத்து முதலிடம் வகிப்பது. அதைத் தொடர்ந்து Gospel For Asia, USA, Plan International, UK, Foundation Vincent E Ferrer, Alicante, Spain, Christian Aid, UK, Foundation Vincent Ferrer, UK, என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. முழுப் பட்டியலையும் நீங்களே அரசாங்க தளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

http://www.mha.nic.in/fcra/annual/ar2005-06.pdf

இங்கு இங்கிலாந்து வந்து பார்த்தால், கிறிஸ்தவ நிறுவனங்கள் பல அலுவலகங்களில் ஏழை குழந்தைகளுக்கு நிதி உதவி வேண்டும், பள்ளிக்கூடத்தில சுவர் கட்ட வேண்டும், தண்ணீர் வசதி வேண்டும் என்று கூறி டொனேஷன் வாங்குகிறார்கள். இந்த பணமெல்லாம் இந்தியாவில் கொடுக்கும் போது, கர்த்தர் கொடுக்கிறார், அவர் உங்களை மீட்கிறார் என்ற வாஞ்சனையோடு கொடுக்கிறார்கள். மனித நேயத்திற்கு பயன்பட வேண்டிய பணம் எப்படி பயன்படுகிறது என்று பாருங்கள். அது மட்டுமல்ல, இந்தியாவில் முதலில் கிறிஸ்தவர்களாக மாறுபவர்களுக்கு சில பண வசதிகள் செய்து தருகிறார்கள். பின்னர் தாங்களே பெருமையாக அழைத்து கொள்ளும் முழுவிசுவாசி ஆன பின்னர் 20 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை காணிக்கையாக செலுத்த வேண்டும். எவ்வளவு கொடூரமாக தீட்டபட்ட திட்டங்கள் ?? கிறிஸ்துவில் இருந்தால் நீங்களே எவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். இந்த செயல்கள் எல்லாம் இந்திய தேசத்தின் நன்மைக்கு புரம்பானவை. இவை தேச துரோக செயல்கள் என்று அழைப்பதில் என்ன தவறு.

மொத்தத்தில் பல்லாயிரம் கோடி புரளும் இந்த நாசகார தொழிற்சாலை இந்தியாவின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழிக்கும் என்பதில் ஐயமில்லை. கிறிஸ்தவ மயக்கத்தில் இருந்து தெளிந்து உண்மையா கொடூரமான உலகை தங்கள் மெய்யான கண்களால் காண்பார்களா இந்திய கிறிஸ்தவர்கள் ?

இவர்கள் உண்மையிலேயே இந்தியாவை காக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ??

1. முதலி்ல் இந்தியாவை நாமே குறை சொல்வதை நிறுத்த வேண்டும். நாம் இந்தியாவிற்கு என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

2. தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். நம் கடமையினை நாம் செய்ய வேண்டும் என்று ஊக்கம் கொள்ள வேண்டும்.

3. கடவுள் என்பவர் எங்கோ இருக்கிறார். நாம் தான் நம் குடும்பத்தையும், நாட்டையும் பண்பாட்டையும் காக்கும் புதல்வர்கள் என்பதை உணர வேண்டும்.

4. கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு கொடுக்கும் பணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படியே நிறைய பணம் இருந்தால் உதவும் கரங்கள் போன்ற மதம் சாரா அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டும். இல்லையேல் நேரடியாக ஏழைக்குழந்தைகளுக்கு செய்திட வேண்டும். முக்கியமாக அப்போது கர்த்தர் கொடுக்கிறார் போன்ற ஏமாற்று வசனங்கள் பேசக் கூடாது.

5. உங்கள் தாத்தா எழுதிய திருக்குறளைப் படித்து முடித்து விட்டீர்களா ? புனித வேதகாமம் என்று அவர்களே அழைத்து கொள்ளும் யாரோ அயல்நாட்டு பண்டையவர்கள் எழுதிய பைபிளை படிப்பதை நிறுத்தி விட்டு திருக்குறள், நன்னெறி, ஆத்திசூடி போன்ற இந்திய நூல்களை எடுத்து படிக்க வேண்டும்.

6. இந்தியா உயரவும், நம் பண்பாடு தழைக்கவும் நம் பண்பாட்டை மேற்கத்தியவர் அறியவும் ஆவன செய்ய வேண்டும். இதுவே முழு குறிக்கோளாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் இந்தியாவின் புதல்வர்கள் அல்லவா ?? உங்கள் தந்தைக்கு நீங்கள் பெருமை சேர்க்க வேண்டாமா ??

வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

No comments: