Monday, 25 February 2008

கிறிஸ்தவர்களின் உருவ வழிபாடு !!!

கிறிஸ்தவர்களின் உருவ வழிபாடு


கிறிஸ்தவர்கள் முதலில் இந்து மார்கத்தையும் கலாசாரத்தையும் குற்றம் கூறும் போது கீழ்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

1. இந்துக்கள் கற்கள், செடி, மரம், புல், பூண்டு, விலங்குகளை வணங்குகிறார்கள். உருவவழிபாடு செய்கிறார்கள். பைபிளில் உருவவழிபாடு செய்ய கூடாது என்று போட்டிருக்கிறது.

2. இந்துவில் முப்பத்து முக்கோடி கடவுள்கள் இருக்கின்றன. எதைக்கும்பிடுவது ?

3. கிறிஸ்தவத்தை தவிர எல்லா மதங்களும் சாத்தானை வழிபடுகிறது.

முதலில் இந்து மதம் கல்லை வழிபட சொல்கிறது என்று எங்கு எழுதப்பட்டு இருக்கிறது கூறுங்கள் ?? அதற்குமுன் அதில் உள்ள கருவையும் தத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். புரிவதற்கு இது வரை என்ன முயற்சி எடுத்து இருக்கிறீர்கள். இயேசு நாதர் என்று தாடி வைத்த ஒருவரின் உருவத்தை தானே படத்திலும் போட்டோவிலும் காட்டுகிறீர்கள். சிலுவை என்பது என்ன கண்களுக்கு தெரியாத பொருளா ? அதற்கும் வடிவம் உருவம் இருக்கத்தானே செய்கிறது. அதை நீங்கள் ஏன் கழுத்திலும் சர்ச்சுகளிலும் வைத்திருக்கிறீர்கள். அதுவும் உருவவழிபாடு தானே ? முதலில் அடுத்தவருக்கு அறிவுரை கூறும் முன்னர் உங்களுக்கே அந்த அறிவுரை கூறிடுங்கள். சிலுவையையும், இயேசுநாதர் படங்கள், சிலைகளையும் முதலில் உடைத்தெறியுங்கள். அதில் உருவம் இருக்கிறதே. உங்களுக்கு புரியவில்லை என்றால் கூகுள் இமேஜில் சென்று ஜீஸஸ் கிரைஸ்ட் அல்லது கிராஸ் என்று தேடுங்கள். அதை அனைத்தையும் அழியுங்கள். உங்கள் சர்ச்சுக்கும் உருவம் இருக்கிறதே. நீங்கள் ஏற்றும் மெழுகுவர்த்தியில் எரியும் தீபத்திற்கும் உருவம் இருக்கிறதே. உங்கள் இயேசு நாதர் இவ்வுலகில் வாழ்ந்த போது அவர் என்ன பேய் பிசாசாகவா இருந்தார். அவருக்கும் உருவம் இருந்ததல்லவா ?

இந்து மதமும் கடவுளை கல்லாக படைக்கவில்லை. கடவுள் என்பவர் ஒருவரே. அது தான் மெய்யான தத்துவம். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று கூறும் போது, அவருடைய விருப்பத்தினாலேயே இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு அசைவும் இருக்கிறது என்று பொருள். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது தான் பொருள். அந்த கடவுள் தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார் என்றால் ஒளியாக, உயிராக, அணுவாக என்று பல்வேறு பொருளாக உருவமாக இருக்கிறார். உங்களுக்கு இரண்டு கை இரண்டு கால்கள் என்று டிசைன் பண்ணியது யார் ? ஏன் சிலருக்கு நான்கு கைகளோடு குழந்தை பிறக்கிறது ? யாருடைய அனுமதியின் பேரில் இதெல்லாம் நடக்கிறது ? பரம்பொருள் என்று சொல்லக்கூடிய இறைவன் ஒருவரே. அவருக்கு நம் முன்னோர்கள் கொடுத்த பெயர் சிவன். ஒவ்வொரு கடவுளின் உருவமும் கடவுள் தன்னைத்தானே பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு காட்டிய நிலையே. எல்லா உருவமும் ஒரே கடவுளையே குறிக்கிறது. இதை உணருவதற்கு நீங்கள் சிந்திக்க வேண்டும். கடவுளின் பல்வேறு நிலைகளை எளிதாக புரிந்து கொள்ள எடுத்து காட்டவே பல்வேறு உருவங்கள் உள்ளன. இறைவனுக்கு முடிவும் கிடையாது. தொடக்கமும் கிடையாது.

இந்த தத்துவத்தை உணர்த்த உங்களுக்கு ஓர் எடுத்து காட்டு தருகிறேன். உங்களுக்கு நன்றாக தெரிந்த அலுவலகத்தையே எடுத்த கொள்ளுங்கள். நான் உதாரணத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எடுத்து கொள்கிறேன். மைக்ரோசாப்ட் எப்படி இயங்குகிறது ? ஒரே ஒரு ஆளுடனா ? இல்லை. கிட்டதிட்ட எழுபதாயிரம் பேர் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் CEO பில்கேட்ஸ் (தற்போது அவரில்லை. ஆனால் தெரிந்தவர் என்பதால் உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம்.) அந்த 70000 பேரில் பல்வேறு மேலாளர்கள் இருப்பார்கள். மார்கெட்டிங், சேல்ஸ், வன்பொருள் வல்லுநர்கள், மென்பொருள் வல்லுநர்கள், டிசைனர்கள், டெஸ்டர்களாகிய பரிசோதகர்கள், ஆர்க்கிடெக்டுகள், HR, என்று எண்ணிலடங்கா பல்வேறு துறைகள் இருக்கும். அமெரிக்காவில் டிசைனர்கள் மாநாடு என்றால் பில்கேட்ஸ் சென்று கொண்டிருக்க மாட்டார். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை குறித்து அதாவது represent பண்ணி சில வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள். அப்படி அந்த வல்லுநர்களை குறிக்கும் போது இவர் தான் மைக்ரோசாப்ட் என்று மற்ற அலுவலககாரர்கள் குறிப்பர். இது போல் ஒவ்வொரு துறையிலும் பல உட்பிரிவுகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேலைகள் இருக்கும். இவர்கள் 70,000 பேரும் ஒன்று சேர்ந்து இயங்கி தான் மைக்ரோசாப்ட் என்று ஒரு நிறுவனத்தையே இயக்குகிறார்கள். மைக்ரோசாப்ட் என்று ஒரே சொல்லில் இந்த 70,000 பேரும் அவகளுடைய வேலைகளும் ஆக்கங்களும் அடக்கம். இந்து மார்கத்திலும் இதே தத்துவம் தான். கடவுள் என்று கூறுவது மைக்ரோசாப்ட் என்று கூறுவதற்கு சமமாகும். நீங்கள் கூறும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த மைக்ரோசாப்டின் 70,000 அங்கத்தினர் போல். என்ன அழகான தத்துவம்.

இன்னொரு உதாரணம். உங்கள் பெயரைச் சொன்னால் உங்கள் உடலை தரும் உருவத்தை தான் எல்லோரும் பார்ப்பார்கள். இது வெறும் உடல் தான். இந்த உடலில் எத்தனை உறுப்புகள் இருக்கின்றன ? அத்தனை உறுப்பகளும் சேர்ந்து ஒன்றாக இயங்கினால் தான் நீங்கள் நீங்களாக இருந்து இப்போது இதை படித்து கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு உருவம். இப்படிதான் பிள்ளையார் முருகன் விஷ்ணு சக்தி என்று கூறினால் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உருவம் நாம் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் சிவன் என்னும் ஒரே பரம்பொருளில் அடக்கம். இந்த விளக்கத்தையும் பாருங்கள்.

http://www.aanmegam.com/hindu.htm

உங்கள் குழந்தைக்கு நீங்கள் எப்படி இந்த பரம்பொருளை காண்பிப்பீர்கள் ?. அவனால் எப்படி இதை உணர்ந்து கொள்ள முடியும் ? அவன் அதை சரியாக உணர்ந்திருக்கிறானா என்று உங்களுக்கு எப்படி தெரியும். அவனுக்கு அடையாளம் காட்டவே நாம் படைத்திருக்கும் ஓவிய சிவபெருமானும், கல்லில் வடித்த சிலையும். அது வெறும் கல் தான். ஆனால் உங்கள் கண்களை மூடிக் கொண்டு அந்த கல்லை மறந்து பரம்பொருளை நினைக்க வேண்டும். பரம்பொருளை தானாக யோசிக்க முடியாதவர்கள், சிந்திக்க கஷ்டப்படுபவர்களுக்கு துணை செய்யவே இந்த கல் சிலைகள். பரம்பொருளை உணர்ந்தவருக்கு கல் சிலைகள் எதற்கு ? இதனால் வீட்டிலிருந்தே கடவுளை வழிபடலாம். தொழில்நுட்ப பாஷையில் கூற வேண்டுமானால், இந்த கல் சிலைகள் Simulators, அதாவது சிமுலேட்டர்கள். சிமுலேட்டர்கள் கடவுள் அல்ல. முதன்முதலில் நான்கு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொள்பவன் எடுத்த எடுப்பிலேயே வாகனத்தை எடுத்து ஓட்டுவதில்லை. அவனுக்கு துணைபுரிய பொம்மை கார் போன்ற ஒன்றில் உட்கார்ந்து பழகுகிறான். அதில் அவன் உட்காரும் போது அவனுக்கு நிஜ காரில் உட்காருவது எப்படி இருக்கும் என்பதை அவன் உணர எளிதாக இருக்கும். இதுதான் விக்கிரக தத்துவம். கல் சிலைகள் சாமி அல்ல. இன்னொரு முறை அவ்வாறு யாராவது உங்களிடம் கூறினால் அவர்கள் அதிலிருக்கும் த்த்துவத்தை உணராது உரைப்பவர்கள். அது அவர்கள் தவறல்ல. நம் தத்துவங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து இன்று நம்மிடையே உள்ளது. ஒவ்வொன்றிலும் இருக்கும் தத்துவத்தையும் மகத்துவத்தையும் நாம் அறிய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து எதையும் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் யாரோ நான் தான் கடவுள் என்று கூறினால் அவர் பின்னே சென்று விடக்கூடாது. யாரோ சில இன வெறியர்கள் எழுதிய பைபிளை தூக்கி எறிந்து விட்டு நம்முடைய தத்துவங்களை படியுங்கள். அது பல்லாயிரமாண்டு மக்களால் உணரப்பட்டது. பலருடைய தாக்குதல்களையும் மீறி இன்றும் நமக்கு உதவி செய்வது. மேலும் படிக்க http://www.shaivam.org

இந்த உண்மைகளி தெரிந்தாலும் பல கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்களின் வணிகத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் இந்துக்கள் மீது அவதூறு பேசுகிறார்கள். அவர்கள் செய்யும் பாவங்களுக்கு அந்த ஆண்டவனே தகுந்த சம்பளம் தருவான்.

இந்தியர்களே... அயல்நாட்டினர் நம் மக்களைத் திருடுகிறார்கள். தூங்கியது போதும். விழித்திடுங்கள். உண்மை உணர்ந்திடுங்கள். அவர்களின் பொய் முகத்திரை கிழித்திடுங்கள். வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

No comments: