கிறிஸ்தவர்களுக்கு தேவனின் நற்செய்திகள்
தவறு என்பது தவறிச் செய்வது.
தப்பு என்பது தெரிந்து செய்வது.
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பு செய்வதன் வருந்தியாகணும்.
இது திரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரானார் அவர்களின் பாடல் வரிகள். மனித குலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி வளர்ந்து வருகிறது. ஆனாலும் இன்றளவில் இறைவனைக் கண்டவர் ஒருவர் உளரோ ? கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது தமிழ் வாக்கு. அதாவது கடவுளைக் கண்டவர் இங்கில்லை. இங்குள்ள யாவரும் கடவுளைக் கண்டதில்லை என்பது இதன் பொருள். இது உண்மையிலும் உண்மையாகும். இதை தவறு என்று நிரூபித்தவர் இங்கு இல்லை. இருந்தால் கூறுங்கள்.
உண்மை இப்படியிருக்க, தூரத்தின் காரணமாக கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனிதகூட்டம் கடவுள் இருக்கிறாரா என்று ஆராய்ந்து அதற்கு ஒரு வடிவமும் கொடுத்து பல மதங்களையும் உருவாக்கியது. அந்தந்த இடத்தி்ல் அந்தந்த மதங்கள் வேரூன்றின. ஆனால், இவை யாவற்றிற்கும் நிரூபனம் இல்லை. அவையெல்லாம் நம்பிக்கை என்ற ஒரே ஒரு அச்சாணியிலிருந்து உருவாக்கபட்டதுதான். இந்தியாவில் வாழ்ந்த முன்னோர்கள் பல வித்தைகளிலும் அனுபவங்களிலும் தலை சிறந்தவர்களாக இருந்தனர். அவர்களின் அறிவுத்திறனுக்கு ஈடே இல்லை. உதாரணத்திற்கு சித்தர்கள், திருவள்ளுவர், பல முனிவர்கள் என்று எல்லா துறையிலும் இயற்கையை நன்றாக அறிந்து ஆட்கொண்ட வல்லுநர்களாக திகழ்ந்தார்கள். இறைவன் என்பவன் ஒருவனே என்றும், அவனே இவ்வுலகை இயக்கும் ஈசனாகவும் உள்ளான் என்றும் கண்டனர். இருந்தாலும், அந்தந்த துறைக்கும் அந்தந்த நேரத்திற்கும் ஏற்றவாறு சிறு சக்தி வடிவமாகவும் இறைவனை கண்டனர். உதாரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளையெல்லாம் எப்படி ஒருவர் Chief Financial Officer பார்த்துக் கொள்கிறாரோ அதைப் போலத்தான். இவ்வாறு ஒரு அற்புதமான வழிபடும் அமைப்பை உருவாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். இவர்களுக்கு 7000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பூமியைப் பற்றிய அனுபவம் நிறைந்திருந்தது.
கடந்த சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஏசு என்ற நல்லவர் ஒருவரின் பெயரிலும் இறைவனின் போதனைகளாகவும் 40, 50 பேர் எழுதி தொகுத்த புத்தகங்களை மையப்படுத்தி கிறிஸ்தவம் என்ற மதத்தையும் உருவாக்கினார்கள் மேற்கத்தியவர்கள். அதுமட்டுமல்ல, அப்போது இருந்த காலகட்டத்தில் தங்கள் மதம் நசிந்து விடக்கூடாது என்பதற்காக பிற மதங்களை சாடியும் அதில் இருக்கும் நம்பிக்கைகள் சாத்தானுடையது என்றும் எழுதி வைத்தார்கள். அதன் பிறகு கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தொடர்ச்சியாக போர். போர் போர் என்று பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து விட்டார்கள். விஞ்ஞான வளர்ச்சியினாலும், சுய அறிவு சிறிது வளர்ந்து விட்டதினாலும் தற்போது போர் நிறுத்தம் செய்துவிட்டார்கள். ஆனால், இன்னும் மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் பழக்கம் அழிந்து விடவில்லை. காலப்போக்கில் முஸ்லீம்கள் பல நாடுகளுக்கு சென்று குடியேறிவிட்டார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் ஐரோப்பா அமெரிக்க கண்டங்களிலேயே சண்டை போட்டுக்கொண்டு இருந்து விட்டார்கள்.
இதனால், கிறிஸ்தவ மதத்தை அடையாளமாக கொண்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது ஆசியாவில் இந்தியாவிலும் சீனாவிலும் தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழ்கிறார்கள். சீனாவில் கம்யூனிசம் இருக்கும் வரை அங்குள்ள யாரையும் மதமாற்றம் செய்ய இயலாது. ஆனால், இந்தியாவில மாபெரும் சுதந்திரம் இருக்கிறது. எனவே, இந்தியாவை குறிவைத்து பல கிறிஸ்துவ இயக்கங்கள் தங்களின் அடையாளங்களை பயன்படுத்த படையெடுத்து வந்திருக்கின்றனர். வந்தாரை வாழ வைத்த இந்தியா அந்த ஒரு நல்ல பண்பினாலேயே அழியும் நிலைக்கு வந்து விட்டது. மதம் என்பது வங்கியைப் போன்றதொரு அமைப்பு. அவ்வளவே. நீங்கள் உங்கள் தாயாரின் உடல்நலத்தை காப்பீர்களா இல்லை தாவூத் இப்ராகிம் சொல்லும் ஆளை அடிக்க செல்வீர்களா ? நீங்களே தீர்ப்பு கூறுங்கள். தாவூத் இப்ராகிமின் பின் செல்பவன் முட்டாளாக இருப்பதைத் தவிர வேறு என்ன உண்மைகள் இருக்க முடியும் ? நீங்கள் உங்கள் தாயின் கொள்கைகளையும் அமைப்புகளையும் உலகுக்கு எடுத்துச் செல்வீர்களா இல்லை எங்கோ ஒருவர் எப்போதோ கூறிச் சென்ற பொய்யுரைகளை எடுத்துக்கொண்டு உங்கள் நண்பர்களையும் கெடுப்பீர்களா ?
இயேசுவை கண்டவர் இந்த உலகில் இல்லை. இந்த உலகில் உள்ளவர் யாரும் இயேசுவைக் கண்டதில்லை. ஆனால் கேட்பவரும் பார்ப்பவரும் நம்பும் படியாக கதைகள் கட்டப்பட்டிருக்கின்றன. சிலர் பயமுறுத்துகிறார்கள். இயேசுவுக்குள் வந்துவிடு. இதுதான் கடைசி தருணம். உண்மையான கடவுள் கொடுக்கும் கடைசி சான்ஸ், வாய்ப்பு என்று. பலவிதமான சூழ்ச்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள் அந்நியர்கள். உலக வரலாற்றை புரட்டிப்பாருங்கள். அவை நம் கண்முன் நடந்தவை. ஜாலியன் வாலாபாக் படுகொலையின் தினத்தன்று சுட வந்தவன் காலையில் இயேசுவை கும்பிட்டு வந்தவன் தான். 65 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயில்களில் நம் மூத்தவர்களின் வாயில் மலத்தை கரைத்து ஊற்றியவர்கள் கழுத்தில் சிலுவைதான் அணிந்திருந்தனர். அன்னை தெரசாவை இந்தியாவே புகழ்கிறது. ஆனால் அவர் சிவபெருமானை வழிபடுவாரா ? அதுவும் இந்திய அமைப்பு தானே. ஆனால் அவரோ கிறிஸ்தவ மதத்தை திணிப்பதையே தொழிலாக கொண்டிருந்தார்.
தெரிந்தோ தெரியாமலோ நம் முன்னோர்கள் அவர்களின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம். ஆனால், நாம் நம்மை உணர்ந்து சரியான வழியில் செல்ல வேண்டாமோ ? மனம் திருந்துங்கள். சர்ச்சுகளுக்கு செல்லாதீர்கள். முக்கியமாக நீங்கள் கடினப்பட்டு உழைத்த பணத்தை அவர்களுக்கு கொடுக்காதீர்கள். பைபிளை படிக்காதீர்கள். திருக்குறளை எடுத்து படியுங்கள். நம் முன்னோர்கள் படைத்தது ஆயிரத்துக்கு மேலான அற்புத இலக்கியங்களும் கதைகளும் இருக்கின்றன. அவற்றை எடுத்து படியுங்கள். வலிமையான பாரதத்தை உருவாக்குங்கள். பகைவர்களை விரட்டுங்கள்.
தவறு செய்தவர் திருந்தியாகணும். தப்பு செய்தவர் வருந்தியாகணும். வளர்க இந்தியா. ஜெய்ஹிந்த்.