Saturday, 26 July 2008

கிறிஸ்துவத்தின் மூல தத்துவ கோளாறு

கிறிஸ்துவத்தின் மூல தத்துவ கோளாறு


நாம் வாழும் அண்டம், பேரண்டத்தில் ஒரு அணுவைப் போன்றது. அந்த அண்டத்தில் சூரிய கோளிலிருந்து சிறு துகளாக பிரிந்து அண்டத்தில் குளிர்ந்து, சூடும் குளிர்ச்சியும் உறவாடும் இடத்தில் சுற்றி உயிரனங்களை வாழ வைத்தது இந்த பூமி. இதை இந்தியர்கள் பூமாதேவி என்று பாசமாக குறிப்பிடுகின்றனர். இந்த பூமி பல கோடி நூறாண்டுகளாக இயங்கி வருகிறது.


இந்த பூமியில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நாளும் உணவளித்து ஒவ்வொரு நாளையும் இயக்கி வருகிறது இந்த மாபெரும் சக்தி. இந்த சக்தி பூமி மட்டுமல்லாது இந்த அண்டம், பேரண்டம் ஆகிய அனைத்திலுமே பரவி நின்று இயக்கி வருகிறது. பேரண்ட பொருட்களையும் இந்த சக்தியே இயக்கி வருகிறது. பேரண்ட பொருட்கள் என்பது இந்த அண்டத்தில் நாம் கண்ணால் காணும் யாவும், உணர்வுகளால் உணரும் யாவும் அடங்கும். இந்த பேரண்ட பொருட்களே பல வித வடிவமும், தன்மையும் பெற்று திகழ்கிறது. இந்த பொருட்களை வெறும் பொருட்களாக இல்லாமல் அதன் தன்மையோடு இருக்க செய்வது தான் சக்தி.


இந்தியர்கள் இந்த பொருட்களுக்கு கொடுத்த பெயர் சிவம். அதை இயக்கும் சக்தி, சக்திதேவியே ஆவார். சிவத்தை ஆணாகவும் சக்தியை பெண்ணாகவும் பாவித்து பல கதைகளும் கூறியுள்ளனர் நம் முன்னோர்கள். இந்த சிவமும் சக்தியும் ஒன்றாய் கலந்ததே இறைவனாகும். ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இந்த உலகிலும் அண்டத்திலும் நிகழும் யாவும் இவைக்கு கட்டுபட்டவையே. இதையே 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்பர் இந்தியர். மேலும் இந்த உலகம் இயங்க மூல காரணமாக இருக்கும் ஆண் பெண் உறவை புனிதமாகவும், ஆணை லிங்க வடிவமாகவும், பெண்ணை பீடமாகவும் பாவித்து வணங்கும் வழிபாடு உலகில் வேறு எந்த மதத்துக்கும் கோட்பாடுகளுக்கும் கிடையாது. இறைவன் மனிதனை தன்னை போலவே படைத்ததாகவும் கோட்பாடுகள் உண்டு. இதனாலேயே, தெய்வீக குணங்களை கொண்ட மனிதர்களை இறைவனுக்கு நிகராக வைத்து பார்க்கும் தத்துவமும் இந்தியர்களிடம் உண்டு.


இப்பூவுலகில் அரிய வாழ்வை பரிசாக பெறப்பட்ட மனிதன், தன் சுய சிந்தனையை பயன்படுத்தி தன்னை படைத்தவனையே உணர முற்பட்டான். இவ்வுலகில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடத்தில் இருந்த மனிதர்கள் இதே உணர்வுகளை கொண்டனர். இறைவனை அறிய முற்பட்டனர்.


கிறித்தவ மதத்தை பாருங்கள். அவர்கள் தத்துவங்களை கூர்ந்து கவனியுங்கள். எங்கோ ஏதோ செய்து கொண்டிருந்த இறைவன், திடீரென்று இந்த உலகத்தை படைத்தாராம். திடீரென்று இந்த பூமியையும், உயிரினங்களையும், பின்னர் மனிதனையும் படைத்துவிட்டு திரும்பி தன் இடத்துக்கே சென்றுவிட்டாராம். 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் தன்னை இறைவன் என்று கூறிக் கொண்டாராம். அவரை வைத்து பலர் பைபிளை எழுதி அவரையே கடவுளாக வைத்து கிறித்தவ மதத்தை வளர்த்தனராம். அதுமட்டுமில்லால், மக்கள் தொடர்ந்து நம்ப வேண்டும் என்பதற்காக, தன் வீட்டிற்கு சென்ற இறைவன், திரும்பி இந்த பூவுலகுக்கு வருவாராம். இது போன்ற இயற்கைக்கு ஒவ்வாத கதைகளை கொண்டு ஒரு மதத்தையே வளர்த்திருக்கிறார்கள். புனித வெள்ளிக்கும் ஈஸ்டருக்கும் இடைப்பட்ட சனிக்கிழமையில் இறைவன் செத்தே போய்விட்டாராம். இப்போது இறைவன் எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு தெளிவான பதில் இல்லை. மேலும் இறைவனை வெறும் ஒரு ஆணாகவும் திரைப்படத்தில் வரும் கதாநாயகனாகவும் சித்தரிக்கிறார்கள். பெண் என்பவள் எப்படி இந்த அண்டத்துக்குள் சேர்கிறாள் என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை. பெண் என்பவளுக்கு சக்தி (Power) யே இல்லையா ? ஆணும் பெண்ணும் சமமில்லையா ?


நம் இந்திய தத்துவங்களையும், உரோமானியர்களின் (கிறிஸ்தவர்களின்) தத்துவங்களையும் நீங்களே சற்று மனதில் ஓட்டி பாருங்கள். உங்கள் அறிவுக்கு என்ன எட்டுகிறது ? இந்த இரண்டு தத்துவங்களுமே ஒன்றோடொன்று ஒவ்வாதவை. நீங்களே முடிவு செய்யுங்கள், எந்த தத்துவம் உண்மையானதாக இருக்க முடியுமென்று !


3 comments:

Anonymous said...

அன்பு நண்பரே,
வணக்கம். உங்களுடைய வலைப்பூ அருமையாக உள்ளது. நான் புதிதாக ஒன்று தொடங்கியுள்ளேன். வருகை தந்து கருத்துச் சொல்ல வேண்டும்.
தேவ்
www.askdevraj.blogspot.com

Anonymous said...

Dear Sir,
I recd. a mail from Muslim Watch.
Atrocities of that religion is enlisted there.
They 've given permission to translate the contents & publish them in a Tamil blog.
I seek yr guidance.
Dev

ஜோனதான் said...

Dear r.devarajan,

We don't need to translate everything. But we can convey the core concept/idea (the excerpts) what it is about in tamil and provide the link to that.

These days its very common one religion or one group pointing the bad stuff about others - no body shows a balanced stuffs.

But we should look out for the truths in any of the materials and point out that.

Regards.