இன்று இங்கிலாந்து எரிகிறது என்று சூடான செய்திகள் பறக்கின்றன. வெள்ளைக்காரர்களின் 'தாமே உலகில் பெரியவன்' என்ற வெட்டி இருமாப்பு, இந்த பூவுலகில் சில ஆயிரம் ஆண்டுகளாக ஆறாத வடுக்களை ஏற்படுத்துவிட்டது.
வெறும் 5 கோடி மக்கள் தொகையே கொண்ட, தம்மை தாமே 'வளர்ந்த நாடு' என்றும் தம்மக்களை 'உயர்குடிமக்கள்' என்றும் தினந்தோறும் மார்தட்டி கொண்டிருக்கும் so called இங்கிலாந்து தான் எரிகிறது. உலகிற்கும் பிறர்க்கும் நீ என்ன கொடுக்கிறாயோ, அதே தான் உனக்கும் கிடைக்கும் என்ற தத்துவத்தை மறந்த இங்கிலாந்து வெள்ளைகாரர்கள், பல நாட்டினருக்கும், பல இனத்தவருக்கும் தொடர்ந்து பல நூறாண்டுகளாக இம்சைகளையும் துன்பங்களையும் கொடுத்து வந்திருக்கிறார்கள். இப்போது அதையெல்லாம் அறுவடை செய்யும் காலம்.
விதை விதைத்தவன் விதை அறுப்பான்- நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த பழமொழி.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
சும்மா சும்மா ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களை தொடர்ந்து இனவெறி என்ற பெயரில் அடி உதை சுடு என்று தொடர்ந்து செய்து வந்தால், அந்த இனம் என்னவாகும் ? வன்முறையை கையில் எடுக்கும். இவ்வாறு சபிக்கப் பட்டவர்கள் தான் கறுப்பர் இன மக்கள். கறுப்பர் இன மக்களை கண்டாலே இன்று உலகமே அஞ்சுகிறது. இதற்கு மூல காரணம், இனவெறி கொண்ட வெள்ளைக்காரர்களும் ஐரோப்பியர்களும் தான்.
1700-1800 களில் இவர்கள் செய்த அடிமைகள் வியாபாரத்தில் வந்தவர்கள் இன்று அவர்கள் நாடான இங்கிலாந்திலேயே கணிசமான அளவில் வாழ்கின்றனர். கறுப்பு வெள்ளை யுத்தம் இன்னும் பல நூற்றாண்டுகள் நீடிக்கும்.
சில வாரங்களுக்கு முன்னர் பிரிஸ்டல் Bristol அருகிலுள்ள ஒரு கட்டிட நிர்வாகியிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கூறினார்: இங்கிருக்கும் பல சர்ச்சுகள் ஒன்று சேர்ந்து கொண்டு இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சில சர்ச்சுகளுக்கு மதமாற்றம் செய்வதற்க்கு பணம் பட்டுவாடா செய்கின்றன என்ற தகவலைக் கூறினார். அந்த சர்ச்சுகளுக்குள் பல சர்ச்சைகள் இருந்தாலும், அடுத்தவனைக் கெடுக்கும் இந்த விஷயத்தில் இவர்கள் ஒன்று கூடிக் கொள்வார்களாம். இவரும் அந்த சர்ச்சில் உறுப்பினர். ஆனால் இவர் அத்தகைய செயல்களில் பங்கு பெறுவதில்லை என்று கூறினார். இந்த செயல் பாவ செயல் என்றும் தான் இது போன்ற செயல்களை செய்ய துணிவதில்லை என்றும் என்னிடம் கூறினார்.
கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் உலக செயல்களை அறிந்திராத கோடிக்கணக்கான இந்திய மக்கள் இத்தகைய மதமாற்றத்துக்கு பலியாகி தம் வரலாறு அறியாமல், தம் பிள்ளைகளுக்கும் தவறான தகவல்களை தந்து, ஒரு கிறிஸ்தவ குருட்டு சமுதாயத்தை உருவாக்கி மாண்டு போகின்றனர். சிலர் இந்த விஷயங்கள் அறிந்தும் தம் வியாபார நோக்கிற்காகவும், வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை குறிவைத்தும், பாரதமாதாவை அழிக்கும் இந்த பாவ செயலை புரிந்து வருகின்றனர்.
மதம் மாற்றப்பட்ட ஒவ்வொரு இந்திய கிறிஸ்தவனும் லண்டன் தெருவில் நடந்து சென்றால், அவனும் இன வெறி தாக்குதலுக்குள்ளாவான். அவ்வாறு தாக்குதலுக்குள்ளாகும் போது தான், அவன் தன் இனத்தையும், இன பெருமையையும் பற்றி அறிந்து அதை புகழும் நிலைக்கு வருவான்.
பொய்களை நீண்ட ஆண்டுகள் மூடி மறைக்க முடியாது. கிறிஸ்தவர்களின் பொய்களுக்கு காலம் பதில் சொல்லும். இந்தியாவில் கிறிஸ்தவம் வீழும்.
வாழ்க இந்தியா. வாழ்க தமிழ். வாழ்க என் தாய்மண்.
No comments:
Post a Comment